/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடைக்கு கட்டடம் ரெடி திறப்பு விழா எப்போது?
/
ரேஷன் கடைக்கு கட்டடம் ரெடி திறப்பு விழா எப்போது?
ரேஷன் கடைக்கு கட்டடம் ரெடி திறப்பு விழா எப்போது?
ரேஷன் கடைக்கு கட்டடம் ரெடி திறப்பு விழா எப்போது?
ADDED : டிச 13, 2025 06:02 AM

வெங்கத்துார்: வெங்கத்துார் ஊராட்சி பகுதியில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து மாதங்களாகியும், பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி பட்டறை பகுதியில் 2023 - 24ம் ஆண்டு எம்.பி., தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் 14.60 லட்சம் ரூபாயில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் திறப்பு விழா நடத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மின் இணைப்பும் வழங்கப்படவில்லை. இதனால் கட்டடம் குடி மையமாக மாறியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கி திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பட்டறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.