/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணியர் நிழற்குடையின்றி சிறுவாபுரி பக்தர்கள் தவிப்பு
/
பயணியர் நிழற்குடையின்றி சிறுவாபுரி பக்தர்கள் தவிப்பு
பயணியர் நிழற்குடையின்றி சிறுவாபுரி பக்தர்கள் தவிப்பு
பயணியர் நிழற்குடையின்றி சிறுவாபுரி பக்தர்கள் தவிப்பு
ADDED : நவ 06, 2025 03:14 AM

கும்மிடிப்பூண்டி: புதுரோடு சந்திப்பில் பயணியர் நிழற்குடையின்றி, சிறுவாபுரி கோவில் செல்லும் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
சென்னையில் இருந்து சிறுவாபுரி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுரோடு சந்திப்பில் இருந்து, இடதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ., பயணிக்க வேண்டும்.
செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில், சிறுவாபுரியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் புதுரோடு சந்திப்பில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
அங்கிருந்து, சிற்றுந்து மூலம் சிறுவாபுரி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். புதுரோடு சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாததால், மழையிலும், வெயிலிலும், சிற்றுந்துக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே, புதுரோடு சந்திப்பில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

