/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : அக் 02, 2025 10:38 PM

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் பொதுவழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
நேற்று முன்தினம் ஆயுத பூஜை, நேற்று விஜயதசமி பூஜை, நாளை சனிக்கிழமை, மறுநாள் ஞாயிறு என, தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகள் விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்தனர்.
மூலவரை தரிசிக்க, தேர்வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால், பொது வழியில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
கோரிக்கை திருத்தணி முருகன் கோவில் தேர்வீதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்க வசதியாக, கோவில் வளாகத்தில் நிர்வாகம் சார்பில், கடைகள் கட்டி ஏலம் விடப்பட்டுள்ளது.
ஏலம் எடுத்தவர்கள், அனுமதிக்கப்பட்ட இடத்தில் பழங்கள், பூஜை பொருட்கள், ஹோட்டல், டீக்கடை, பொம்மை கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
சிலர் கோவில் நிர்வாக அனுமதியின்றி தேர் வீதியில் பூக்கடை, பழக்கடை, உருவ பொம்மை போன்ற கடைகள் வைத்து, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
சில வியபாரிகள், பொருட்களை வாங்கி செல்லுமாறு பக்தர்களுக்கு நெருக்கடி தருகின்றனர். விடுமுறை, பண்டிகை நாட்களில், தேர்வீதி கடைக்காரர்களால், நடந்து செல்ல வழியின்றி பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
கோவில் நிர்வாகம் அ வ்வப்போது கடைகளை அகற்றினாலும், மறுநாளே மீண்டும் கடைகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் வைப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.