/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு மனை பட்டா கோரி ஏலியம்பேடில் போராட்டம்
/
வீட்டு மனை பட்டா கோரி ஏலியம்பேடில் போராட்டம்
ADDED : அக் 02, 2025 10:38 PM
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அருகே வீட்டு மனை பட்டா கேட்டு, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில், பல ஆண்டுகளாக வசித்து வரும், 70 குடும்பத்தினர், வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வருகின்றனர்.
சாலை மறியல், முற்றுகை ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகத்தில் குடியுரிமை சான்று ஒப்படைப்பு போராட்டம் என, பல வகை போராட்டம் நடத்தியும், இதுவரை வீட்டு மனை பட்டா கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அவரவர் வீடுகள் முன் கருப்பு கொடி ஏற்றினர். தொடர்ந்து கிராம சேவை மையத்தில், கருப்பு பேட்ஜ் அணிந்து அமர்ந்தபடி கோஷமிட்டனர்.
பொன்னேரி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், தாசில்தார் சோமசுந்தரம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர். முறையாக நில அளவீடு செய்து, இம்மாத இறுதிக்குள் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர்.
இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.