/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
/
புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 02, 2025 10:38 PM
கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு இணைப்பு சாலை சேதமடைந்து, புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு உள்ளது.
அங்கிருந்து பிரியும் இணைப்பு சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், கருவூலம் மற்றும் சிந்தலகுப்பம் கிராமம் செல்ல வேண்டும்.
அந்த இணைப்பு சாலை வழியாக, தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு, தினசரி நுாற்றுக்கணக்கான நிலக்கரி லாரிகள் சென்று வருகின்றன.
அதிக பார லாரிகளால், இணைப்பு சாலை சேதமடைந்து, புழுதி பறக்கும் சாலையாக மாறியுள்ளது.
இதனால் அவ்வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். இணைப்பு சாலையை தரமாக அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.