/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்
/
மெதுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்
மெதுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்
மெதுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்
ADDED : நவ 09, 2024 08:02 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் துணை மின்நிலையத்தில் இருந்து, 50க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.
இங்கிருந்து, 20ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள், 1,000க்கும் மேற்பட்ட விவசாய மோட்டார்கள், அரிசி ஆலைகள், ஐஸ் பிளாண்டுகள் உள்ளிட்டவைகளுக்கு மின்சேவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இங்கு உதவி பொறியளார் உள்ளிட்ட போதிய பணியாளர்கள் இல்லாததால், மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இங்கு உதவி பொறியாளர் இல்லாததால், பராமரிப்பு பணிகளுக்கு தேவையான மின் உபகரணங்களை பெற முடியாத நிலை உள்ளது.
மெதுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டுகளை உடனுக்குடன் சரிசெய்ய முடியாமல், மின்பயனீட்டாளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.