/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம் பொருட்கள் பாதுகாப்பு கேள்விகுறி
/
பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம் பொருட்கள் பாதுகாப்பு கேள்விகுறி
பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம் பொருட்கள் பாதுகாப்பு கேள்விகுறி
பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம் பொருட்கள் பாதுகாப்பு கேள்விகுறி
ADDED : மார் 31, 2025 03:11 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள திரவுபதியம்மன் கோவில் பின்புறம், 20 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
இந்த கடையில், 400க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடை கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் சேதமடைந்துள்ளன.
மேலும், கட்டட மேற்கூரை தளம் சேதமடைந்து உள்ளதால், மழை பெய்தால் தண்ணிர் கசிந்து அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் நனைந்து வீணாகின்றன. இக்கட்டடத்தை முறையாக சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் பலமுறை கிராம சபையில் மனு அளித்தனர்.
ஆனால், தற்போது வரை கட்டடம் சீரமைக்காததால், ரேஷன் பொருட்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.