/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை பணிகளில் தரம் குறைந்தால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை
/
சாலை பணிகளில் தரம் குறைந்தால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை
சாலை பணிகளில் தரம் குறைந்தால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை
சாலை பணிகளில் தரம் குறைந்தால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை
ADDED : டிச 11, 2024 01:15 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் பல இடங்களில் நடந்த வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகளின் தரத்தை சென்னையைச் சேர்ந்த நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் தரக்கட்டுப்பாடு இயக்குனர் எம்.சரவணன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் செல்வநம்பி, திருவள்ளூர் மாவட்ட கட்டுமானம் மற்றும் பராாமரிப்புத் துறை கோட்டப்பொறியாளர் சிற்றரசு, செங்கல்பட்டு நபார்டு கிராம சாலை கோட்டப் பொறியாளர் சிவசேனா உட்பட பலர் உடனிருந்தனர்.
இதில், சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைவு பெற்ற காக்களூர் - ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலை, திருத்தணியில் நெடுஞ்சாலை மற்றும் மணவூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நடந்து வரும் பாலத்தின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், நெடுஞ்சாலை பணிகளில் தரம் குறைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, தரக் கட்டுப்பாடு இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார்.