/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் ரோப்கார் வளாக சாலையில் இடையூறாக வாகனங்கள் அணிவகுப்பு
/
சோளிங்கர் ரோப்கார் வளாக சாலையில் இடையூறாக வாகனங்கள் அணிவகுப்பு
சோளிங்கர் ரோப்கார் வளாக சாலையில் இடையூறாக வாகனங்கள் அணிவகுப்பு
சோளிங்கர் ரோப்கார் வளாக சாலையில் இடையூறாக வாகனங்கள் அணிவகுப்பு
ADDED : அக் 11, 2024 01:26 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டாபளையம் பெரிய மலையில் யோக நரசிம்ம சுவாமியும், சின்னமலையில் அனுமனும் அருள்பாலிக்கின்றனர். திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட பாதை உள்ளது. முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த மலைக்கோவிலுக்கு படி வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர். இந்த மலைக்கோவிலுக்கு, பக்தர்கள் பங்களிப்புடன் கடந்த மார்ச் மாதம், ரோப்கார் சேவை ஏற்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் மலைக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வர துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரோப்கார் வளாகத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், நடைபயணமாக வரும் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானங்களுக்கு பார்க்கிங் பகுதியும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விதிமுறைகளை மீறி, வாகன ஓட்டிகள், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால், விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது. வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.