/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட தடகளம்: வளசரவாக்கம் பள்ளி மாணவன் முதலிடம்
/
மாவட்ட தடகளம்: வளசரவாக்கம் பள்ளி மாணவன் முதலிடம்
ADDED : ஆக 29, 2025 12:35 AM
சென்னை, முதல்வர் கோப்பைக்கான மாவட்ட போட்டிகளில், வளசரவாக்கம், பொன் வித்யாஸ்ரம் பள்ளி மாணவன் சஞ்சய், தடை ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் முதல் இடம் பிடித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை - 2025க்கான, சென்னை மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
ஆடவர் பிரிவு தடை ஓட்டத்தில், வளசரவாக்கத்தில் உள்ள பொன் வித்யாஸ்ரம் பள்ளி மாணவன் சஞ்சய், போட்டி துாரத்தை, 13.53 வினாடியில் கடந்து, முதல் இடம் பிடித்து மண்டல போட்டிக்கு தகுதி பெற்றார்.
அடுத்து நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில், 6.40 மீ., தாண்டி, சஞ்சய் முதல் இடம் பிடித்தார். இவர், இதற்கு முன் நடந்த மாநில ஜூனியர் போட்டியில் மாநில சாதனை படைத்தவர்.