/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் 50 சதவீதம் மானியம் பெறலாம்
/
நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் 50 சதவீதம் மானியம் பெறலாம்
நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் 50 சதவீதம் மானியம் பெறலாம்
நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் 50 சதவீதம் மானியம் பெறலாம்
ADDED : அக் 17, 2024 10:49 PM
திருவள்ளூர்:பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, 2024------25 நிதி ஆண்டில், 14 ஒன்றியத்தில், தலா 100 வீதம், 1,400 பெண்களுக்கு நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில், தலா 40 கோழி குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கனவே, இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு மற்றும் கோழி பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது. தேர்வு செய்யப்படும் பயனாளி 3,200 ரூபாய் சொந்த செலவில் நாட்டுக் கோழி குஞ்சுகள் கொள்முதல் செய்ய வேண்டும். 50 சதவீத மானியத் தொகை 1,600 ரூபாய் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண் பயனாளிகள், அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.