/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் திருக்கல்யாணம் திருத்தணியில் கோலாகலம்
/
திரவுபதியம்மன் திருக்கல்யாணம் திருத்தணியில் கோலாகலம்
திரவுபதியம்மன் திருக்கல்யாணம் திருத்தணியில் கோலாகலம்
திரவுபதியம்மன் திருக்கல்யாணம் திருத்தணியில் கோலாகலம்
ADDED : மே 01, 2025 01:40 AM

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மூலவருக்கு சந்தன காப்பு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.
மதியம், 1:30 முதல் மாலை 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், மாலை உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் மற்றும் இரவு 11:00 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.
நேற்று நண்பகல் 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திரவுபதியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் மற்றும் நவகிரக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அர்ஜுனன், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. நாளை சுபத்திரை திருமணம், மே 5ம் தேதி அர்ஜுனன் தபசு, 11ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.