/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்
ADDED : மார் 15, 2024 07:52 PM

திருவள்ளூர்:ஆவடி பைபாஸ் சாலை சந்திப்பில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, வெள்ளியூரில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, வெள்ளியூரில் இருந்து திருவள்ளூர் வரை, குழாய் வழியாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பின், இங்குள்ள மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, பின், வீடுகள், தெருக்களுக்கு குழாய் வழியாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் ஜே.என்.சாலை - ஆவடி பைபாஸ் சாலை சந்திப்பில், தற்போது, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சாலை சந்திப்பில் இருந்த குழாய், உடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை குடிநீர் வினியோகம் துவங்கியதும், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து, குடிநீர் பீய்ச்சியடித்து, சாலையில் குளம் போல் தேங்கியது.
இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள், மணல் மூட்டை வைத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடைத்து, தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்தினர். இருப்பினும், அழுத்தம் காரணமாக, குழாய் உடைப்பில் இருந்து தண்ணீர் வெளியேறி, சாலையோரம் குளமாக தேங்கி உள்ளது.
எனவே, உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைத்து, தண்ணீர் விரயமாவதை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

