/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்
/
நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்
நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்
நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்
ADDED : மார் 13, 2024 09:47 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், 16,985 வீடுகளில், 65,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு, 50 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக பட்டரைபெரும்புதுார், புங்கத்துார் உட்பட 13 இடத்தில், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
கூடுதல் நீர் தேவைக்காக, வெள்ளியூர் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, தினமும் 35 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுக்கப்பட்டு, வெள்ளியூரில் இருந்து திருவள்ளூர் நகராட்சிக்கு, வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், காக்களூர், ஈக்காடு ஊராட்சி பகுதிகளுக்கும், வெள்ளியூர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக, வெள்ளியூரில் இருந்து செங்குன்றம் - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஈக்காடு கண்டிகையில் இருந்து திருவள்ளூர் ஒன்றிய அலுவலகம் வரை, ஆங்காங்கே குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி, விரயமாகி வருகிறது.
மேலும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலையும் பழுதாகி, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

