தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குழாய் இணைப்பில் உடைப்பு இரண்டு நாளாக வீணாகும் குடிநீர்

குழாய் இணைப்பில் உடைப்பு இரண்டு நாளாக வீணாகும் குடிநீர்

குழாய் இணைப்பில் உடைப்பு இரண்டு நாளாக வீணாகும் குடிநீர்


UPDATED : நவ 10, 2026 07:42 PM

ADDED : நவ 10, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 07:42 PM ADDED : நவ 10, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால், இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இல்லாத நிலையில், சென்னை நகருக்கு தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்காக, பூண்டி நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் உள்ள பாண்டூர், புல்லரம்பாக்கம், சதுரங்கப்பேட்டை, பூதுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு, மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு, குழாய் வழியாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலை, சதுரங்கப்பேட்டை அருகில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் விரயமாகி, சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது.

மேலும், உடைப்பு ஏற்பட்ட இடத்தில், கழிவு நீர் கலந்து விடுவதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.

எனவே, குடிநீர் வாரியம் அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us