/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை தடுப்பில் மோதி டிரைவர் பலி
/
சாலை தடுப்பில் மோதி டிரைவர் பலி
ADDED : ஜன 15, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் அருகே, ஆந்திர மாநிலம், தடா அடுத்த, பீமுவார்பாளையம் கிராமத்தில் வசித்தவர் தேவன், 40; ஆட்டோ டிரைவர். நேற்று காலை, கவரைப்பேட்டையில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி, தனியாக ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பெரியஓபுளாபுரம் அருகே குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க, இடது புறமாக ஆட்டோவை திருப்பினார். கட்டுப்பாடு இழந்து சாலையோர கான்கிரீட் தடுப்பின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.