/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் நிறுத்தும் லாரிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையில் நிறுத்தும் லாரிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் நிறுத்தும் லாரிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் நிறுத்தும் லாரிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 29, 2025 01:18 AM

பள்ளிப்பட்டு:சாலையோர உணவகங்களுக்காக நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் ஏராளமான மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளுக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன.
இதனால், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கே.ஜி.கண்டிகை பகுதியில் டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. டிப்பர் லாரிகளால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகாவில் நெடுஞ்சாலையோரத்தில் சிறு உணவகங்கள் அதிகளவில் துவக்கப்பட்டுள்ளன.
டிப்பர் லாரி ஓட்டுநர்களை குறிவைத்தே இந்த உணவகங்கள் துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உணவகங்கள் முன், டிப்பர் லாரிகளை நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் சாப்பிட செல்வதால், எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
'பார்க்கிங்' வசதியின்றி செயல்படும் உணவகங்களை கட்டுப்படுத்தவும், எந்தவித எச்சரிக்கையும் இன்றி சாலையில் நிறுத்தப்படும் டிப்பர் லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.