/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இயல்பு நிலைக்கு திரும்பும் எழும்பூர் ஹாக்கி அரங்கம்
/
இயல்பு நிலைக்கு திரும்பும் எழும்பூர் ஹாக்கி அரங்கம்
இயல்பு நிலைக்கு திரும்பும் எழும்பூர் ஹாக்கி அரங்கம்
இயல்பு நிலைக்கு திரும்பும் எழும்பூர் ஹாக்கி அரங்கம்
ADDED : நவ 21, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, நவ. 21-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எழும்பூரில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கு உள்ளது. இங்கு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கடைசியாக தேசிய அளவிலான, 14வது சீனியர் ஹாக்கி போட்டி நடத்தப்பட்டது, அதில், ஒடிசா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
போட்டிகள் முடிந்த பின், போட்டியின்போது ஏற்பட்ட சேதம் மற்றும் வைக்கப்பட்ட பேனர்களை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.
ஆங்காங்கே இருந்த குப்பை கழிவுகள், வீண் பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டு, அரங்கம் முழுதும் சுத்தம் செய்யப்பட்டது.