/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விரிவாக்க பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

ADDED : அக் 24, 2025 12:44 AM
மப்பேடு: மப்பேடு அருகே நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்த, 50 வயதுள்ள முதியவர் உயிரிழந்தார்.
கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சிக்குட்பட்டது பராசங்குபுரம். இப்பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
நேற்று காலை சாலை விரிவாக்கப்பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் ஒருவர் இறந்து கிடப்பதாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மப்பேடு போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 50 வயதுள்ள அவர் எப்போது பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து உயிரிழந்தார்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.