ADDED : செப் 24, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் வீரக்கோவில் கிராமத் தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 42. இவர் வீட்டின் அருகிலேயே மின் மோட்டார் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார்.
இரண்டு மின் மோட்டார்கள் பழுது பார்த்து வீட்டின் வெளியே வைத்துள்ளார்.
இரண்டு மின் மோட்டார்களும் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் திருடப்பட்டன.
கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின்படி திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.