/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செடி, கொடிகள் படர்ந்துள்ள மின்கம்பங்கள்
/
செடி, கொடிகள் படர்ந்துள்ள மின்கம்பங்கள்
ADDED : டிச 04, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புளியங்குண்டா கிராமம். இங்கு கனகம்மாசத்திரம் ---- திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இரண்டு மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன.
இதனால், மழை மற்றும் பேரிடர் காலங்களில் மின்கம்பிகளில் பழுது ஏற்பட்டால் மின்கம்பங்களில் ஊழியர்கள் ஏறி மின்சாரத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.