/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுனருக்காக மின்வாரிய லாரி 6 மாதங்களாக காத்திருப்பு
/
ஓட்டுனருக்காக மின்வாரிய லாரி 6 மாதங்களாக காத்திருப்பு
ஓட்டுனருக்காக மின்வாரிய லாரி 6 மாதங்களாக காத்திருப்பு
ஓட்டுனருக்காக மின்வாரிய லாரி 6 மாதங்களாக காத்திருப்பு
ADDED : செப் 19, 2024 11:40 PM

திருத்தணி,:திருத்தணி பழைய சென்னை சாலையில், திருத்தணி துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. இந்த மின்நிலையத்தில் இருந்து திருத்தணி நகரம், முருகன் கோவில் மற்றும் திருத்தணி கிழக்கு ஊரக பகுதி கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த துணை மின்நிலையத்திற்கு, மின்வாரிய பணிகளுக்காக, அரசு சார்பில் லாரி ஒன்று வழங்கப்பட்டது. இந்த லாரி வாயிலாக, புதிய மின்கம்பங்கள், மின்மாற்றிகள் காஞ்சிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை அலுவலகத்தில் இருந்து திருத்தணி கொண்டு வரப்படுகிறது.
மேலும், தேவையான இடங்களுக்கு மின்கம்பம், மின்மாற்றிகள் லாரி வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், லாரி ஓட்டுனர் கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
அதன்பின் மின்வாரிய லாரி ஓட்டுனர் இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது மின்வாரிய பணிகளுக்கு வாடகை வாகனங்கள் தேடி அலைய வேண்டியுள்ளது.
இதனால், ஆறு மாதங்களாக மின்வாரிய லாரி அலுவலக வளாகத்தில் வீணாக நிறுத்தப்பட்டுள்ளன. லாரி இயக்காமல் இருப்பதால், லாரியின் முக்கிய பாகங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மின்வாரிய லாரிக்கு ஓட்டுனர் நியமிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து திருத்தணி மின்வாரியத்தின் உயரதிகாரி கூறியதாவது:
லாரி ஓட்டுனர் பணியிடம் காலியாக உள்ளது என, ஒவ்வொரு மாதமும் எங்களின் உயரதிகாரிகளுக்கும், அரசுக்கும் கடிதம் மூலம் பரிந்துரை செய்து வருகிறோம். ஓட்டுனர் நியமிப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.