/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அலட்சிய போக்கை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை
/
அலட்சிய போக்கை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை
அலட்சிய போக்கை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை
அலட்சிய போக்கை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 25, 2025 10:57 PM
கும்மிடிப்பூண்டி,பூவலம்பேடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தினரின் அலட்சிய போக்கை கண்டித்து, கிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, குருவராஜகண்டிகை, பாத்தப்பாளையம், வாணியமல்லி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
பூவலம்பேடு மின் பொறியாளர் அலுவலக ஊழியர்கள், தொடர்ந்து அலட்சிய போக்கை கடைப்பிடிப்பதால், மேற்கண்ட கிராம மக்கள் தொடர் மின் வெட்டு மற்றும் குறைந்தளவு பிரச்னைக்கு ஆளாகி வருகின்றனர்.
'முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது இல்லை. மின்வெட்டு ஏற்பட்டால், முறையாக பதிலளிப்பது கிடையாது' என, அடுக்கடுக்கான புகார்களை கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நே ற்று பில்லாக்குப்பம், பாத்தப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலர் அருள் தலைமையில், பூவலம்பேடு மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, 'முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிடப்பில் போடப்பட்ட சிறுபுழல்பேட்டை - பில்லாக்குப்பம் நேரடி மின் பாதையை விரைந்து செயல்படுத்த வேண்டும்' என, கோஷமிட்டனர். இதை தொடர்ந்து, செயற்பொறியாளர் பாண்டியனிடம் மனு அளித்து சென்றனர்.