/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீனவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
/
மீனவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
ADDED : பிப் 13, 2024 08:23 PM
பொன்னேரி:பழவேற்காடு மீனவ பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்காக, 'நங்கூரம் பழவேற்காடு' என்ற பெயரில் வேலை வாய்ப்பு முகாம் கடந்த, இரு தினங்களாக, பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம், புயல் பாதுகாப்பு மைய வளாகத்தில் நடந்தது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், பொன்னேரி தாசில்தார் மதிவாணன்,மேற்பார்வையில் நடந்த முகாமில், 19 நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 532 பேர் பங்கேற்றனர்.
முதல்நாள் முகாமில் கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். முகாமில், 175 ஆண்கள், 58 பெண்கள் என, 233 பேர் பயனடைந்தனர். மேலும், 122பேர் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

