/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க அழைப்பு
/
முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க அழைப்பு
ADDED : ஏப் 08, 2025 11:02 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர் தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 25 வயதுக்கு மேல் இருக்கும் முன்னாள் படை வீர்கள் மகன்கள் முன்னாள் படைவீரருடன் இணைந்து பங்குதாரர் ஆக தொழில் தொடங்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044- 29595311 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.