/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்
/
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்
ADDED : மே 05, 2025 11:57 PM
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 14ம் தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 14ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்துடன், முன்னாள் படைவீரருக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு, திறன் பயிற்சி அளிக்கும் திட்டம் மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம், மருத்துவ முகாம் ஆகியவையும், காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இக்கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.