/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னமண்டலி சந்திப்பில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு
/
சின்னமண்டலி சந்திப்பில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு
சின்னமண்டலி சந்திப்பில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு
சின்னமண்டலி சந்திப்பில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 21, 2025 02:57 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலை, 14 கி.மீ., துாரம் உடையது. இச்சாலையை ஒட்டி மணவூர், பாகசாலை என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பள்ளி போன்ற இடங்களில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, களாம்பாக்கம் - ---சின்னமண்டலி ----- அண்டாத்துார் செல்லும் சந்திப்பு சாலை உள்ளது. இச்சாலையில் ஆங்காங்கே வளைவு உள்ளது. இதை கவனிக்காமல் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, இச்சாலையில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.