/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்
/
குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்
ADDED : நவ 27, 2024 10:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், டிச.2ல் ஆண்களுக்கு நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், வரும் டிச.2ல் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது.
முகாமில், கத்தி, ரத்தம் இன்றி, பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல், நவீன அறுவை சிகிச்சை அளிக்கப்படும். இச்சிகிச்சை பெறும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படும்.
பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சையை விட, ஆண்களுக்கு செய்யும் சிகிச்சை மிக எளிமையானது. சிகிச்சை முடிந்து, 2 மணி நேரத்தில் அவர்கள் வழக்கமான பணியை மேற்கொள்ளலாம். இச்சிகிச்சை முறை குறித்து 90948 11270, 94458 22285 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.