ADDED : ஜன 13, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 65. விவசாயி. இவர், நேற்று மதியம், தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு, திருத்தணி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக, 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திருத்தணி காசிநாதபுரம் கொல்லாபுரியம்மன் கோவில் அருகே வந்த போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.
இதில், சுப்ரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.