/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துார் வாரிய குளத்தில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
/
துார் வாரிய குளத்தில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
துார் வாரிய குளத்தில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
துார் வாரிய குளத்தில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 05, 2024 06:38 AM

புட்லுார்: நுாறு நாள் வேலை திட்டத்தில், துார் வாரப்பட்ட குளத்தில், மழைநீர் நிரம்பி உள்ளதால், பகுதிவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் ஊராட்சிக்கு உட்பட்டது, சீனாக்குளம். ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம், புட்லுார் - அரண்வாயல் செல்லும் சாலையில் உள்ளது.
இக்குளத்தில், மழை காலத்தில், தண்ணீர் தேங்கி, அருகில் உள்ள வயல்வெளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர, பயன்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த குளம் பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டி, துார்ந்து போனது. இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த குளம் துார் வாரி கரை பலப்படுத்தப்பட்டது. குளத்திற்கு வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டது.
இதன் பயனாக, கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால், குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டும் உயர்ந்துள்ளதாக, பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

