/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நில விபரம் பதிவு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு
/
விவசாயிகள் நில விபரம் பதிவு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு
விவசாயிகள் நில விபரம் பதிவு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு
விவசாயிகள் நில விபரம் பதிவு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : ஏப் 16, 2025 08:23 PM
திருவள்ளூர்:வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நில விபரம் பதிவு செய்ய, வரும் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கலாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய - மாநில அரசின் பல்வேறு திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு நில உடைமை விபரம், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் அனைத்து விபரங்களை மின்னணு முறையில் சேகரிக்க, தமிழகத்தில் வேளாண் அடுக்கக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், மொபைல் எண், நில விபரங்கள் இணைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 59,021 விவசாயிகள், தங்களின் விபரங்களை பதிவு செய்துள்ளனர். இன்னும் 31,501 விவசாயிகள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.
எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், தங்களது நில உடைமை விபரங்களை உடனே பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.