/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடைவெளி இல்லாமல் சாலையில் தடுப்பு விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு
/
இடைவெளி இல்லாமல் சாலையில் தடுப்பு விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு
இடைவெளி இல்லாமல் சாலையில் தடுப்பு விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு
இடைவெளி இல்லாமல் சாலையில் தடுப்பு விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : ஆக 27, 2025 02:26 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இடைவெளி விடாமல் டிவைடர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை - -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி, பகுதி பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணி தற்போது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்ட ரோட்டின் மையப் பகுதியில் டிவைடர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
டிவைடர் முக்கிய நகரங்களில் குறுக்கு ரோடுகள் சந்திக்கும் இடங்களில் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், கனகம்மாசத்திரம் செல்லும் ரோடில் இடைவெளி விடாமல் டிவைடர் அமைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆற்காடு குப்பம் பனப்பாக்கம் சீதாபுரம் ராமாபுரம் நெடும்பரம் என, 20 கிராமங்களுக்கு மையப்பகுதியாக கனகம்மாசத்திரம் உள்ளது.
இந்த இடத்தில் வாகனங்கள் கடந்து செல்ல இடைவெளி இல்லை என்றால் பெரும் சிரமம் நிலவும் மேலும் வியாபாரம் பாதிக்கப்படும் பள்ளி கல்லுாரி செல்வோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும் பேருந்துகள் கனகம்மாசத்திரம் பஜாருக்கு வராமல் வெளி வட்ட சாலையில் செல்வதாக கூறி நேற்று 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதையறிந்த, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.