/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆன்லைன் பரிவர்த்தனையால் விவசாயிகள்...அதிருப்தி:மானிய இடுபொருட்கள் வாங்குவதில் சிக்கல்
/
ஆன்லைன் பரிவர்த்தனையால் விவசாயிகள்...அதிருப்தி:மானிய இடுபொருட்கள் வாங்குவதில் சிக்கல்
ஆன்லைன் பரிவர்த்தனையால் விவசாயிகள்...அதிருப்தி:மானிய இடுபொருட்கள் வாங்குவதில் சிக்கல்
ஆன்லைன் பரிவர்த்தனையால் விவசாயிகள்...அதிருப்தி:மானிய இடுபொருட்கள் வாங்குவதில் சிக்கல்
UPDATED : ஏப் 04, 2025 03:05 AM
ADDED : ஏப் 03, 2025 07:26 PM
வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்படும் விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் வாங்க, ஆன்லைன் பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்துள்ளது. பெரும்பாலான விவசாயிகளிடம் ஸ்மார்ட் மொபைல் போன் இல்லாததால், இடுபொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
� ஆன்லைன் பரிவர்த்தனையால் விவசாயிகள்...
� மானிய இடுபொருட்கள் வாங்குவதில் சிக்கல்
திருத்தணி, ஏப். 4-
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பூண்டி, கடம்பத்துார், பூந்தமல்லி, வில்லிவாக்கம், எல்லாபுரம், சோழவரம், கும்மிடிப்பூண்டி, புழல், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் மீஞ்சூர் என , 14 ஒன்றியங்களில், மொத்தம், 526 ஊராட்சிகள் உள்ளன.
பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை, எண்ணெய் வித்து, சிறுதானியம். சவுக்கு மற்றும் காய்கறி போன்ற பயிர்களை அதிகளவில் பயிர் செய்கின்றனர்.
விவசாயிகள் நெல், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற விதைகளை, ஒன்றியங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் வாங்கி செல்கின்றனர்.
34 மையங்கள்
மானியம் பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் கார்டு, நிலத்தின் கனிணி பட்டா, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களை வேளாண் துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்து, தங்களுக்கு தேவையான விவசாய இடுபொருட்களை, வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பணம் கொடுத்து வாங்கி வந்தனர்.
இதற்காக, 14 ஒன்றியத்தில் தலா ஒரு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் ஒன்று முதல் இரண்டு துணை வேளாண் விரிவாக்க மையம் என, மொத்தம், 34 மையங்கள் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் வரை விவசாய இடுபொருட்களை விரிவாக்க மையத்தில் பணமாக கொடுத்து விவசாயிகள் வாங்கி சென்றனர்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் விவசாயிகள் இடுபொருட்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் கருவிகளை, மானிய விலையில் பெறுவதற்கு தேவையான பணத்தை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, வேளாண் துறை அறிவித்து நடைமுறை படுத்தியது.
பயிற்சி இல்லை
இதனால் கிராமப்புற விவசாயிகள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகளிடம் ஸ்மார்ட் மொபைல் போன் இல்லை. அதை கையாளுவதற்கு போதிய பயிற்சி இல்லை. பெரும்பாலான விவசாயிகள் ஏ.டி.எம்., கார்டு இல்லாமல் உள்ளனர்.
டிஜிட்டல் முறை
இதுகுறித்து மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேளாண் துறை டிஜிட்டல் முறைக்கு மாறி உள்ளதால், விவசாயிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள எண் அட்டை வழங்கப்படவுள்ளது.
இந்த அட்டையின் மூலம், விவசாயிகள், மீன்வளத்துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் துறை, கூட்டுறவு துறை, மின்வாரியம் உள்பட வேளாண் சம்மந்தப்பட்ட 13 துறைகளில் இருந்து விவசாயிகள் மானியம் பெற முடியும்.
ஆன்லைன் பரிவர்த்தனையால் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும். சில முறைகேடுகள் தவிர்க்கப்படுவதற்கு ஆன்லைன் பரிவர்த்தனை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.