/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
/
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
ADDED : நவ 29, 2024 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், 7 பேருக்கு 30.48 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், விவசாயம் மற்றும் பல்வேறு பிரச்னை குறித்து 182 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், ஏழு விவசாயிகளுக்கு, 30.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வேளாண் இணை இயக்குனர் கலாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.