/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி
/
தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி
ADDED : டிச 12, 2024 11:30 PM
திருத்தணி:திருத்தணி தாலுகா, சத்திரஞ்ஜெயபுரம், வேலஞ்சேரி, தாழவேடு, கோபாலபுரம், அருங்குளம், பட்டாபிராமபுரம், விநாயகபுரம், நெமிலி பொன்பாடி உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம், கோழிக் கொண்டை போன்ற பல்வேறு பூ பயிரிட்டுள்ளனர்.
விவசாயிகள், தினமும் காலை முதல், மதியம் வரை பூந்தோட்டத்தில் பூக்கள் பறித்து, திருத்தணி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.
மேலும், தொடர்மழை பெய்து வருவதால், பூக்கள் செடியிலேயே அழுகிவிடுகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர். ஒரு சில விவசாயிகள் கொட்டும் மழையிலும், குடைகள் மற்றும் ரெயின்கோர்ட் அணிந்து பூ பறித்தனர்.

