/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தைகளுடன் சென்ற தந்தை பூண்டி நீர்த்தேக்கத்தில் விழுந்து பலி
/
குழந்தைகளுடன் சென்ற தந்தை பூண்டி நீர்த்தேக்கத்தில் விழுந்து பலி
குழந்தைகளுடன் சென்ற தந்தை பூண்டி நீர்த்தேக்கத்தில் விழுந்து பலி
குழந்தைகளுடன் சென்ற தந்தை பூண்டி நீர்த்தேக்கத்தில் விழுந்து பலி
ADDED : ஜூன் 12, 2025 02:58 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் எம்.ஜி.ஆர்., நகரில் வசித்து வந்தவர் ரமேஷ், 44. நேற்று முன்தினம் மாலை இவர் தனது மகள், சவிதா, 14, அஸ்வின்பாலாஜி, 12 ஆகியோருடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றார். நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணா கால்வாயில் கால் படும்படி அமர்ந்தனர்.
அப்போது கால் வழுக்கி ரமேஷ் திடீரென கால்வாயில் விழுந்தார். தந்தை நீரில் விழுந்ததை கண்ட சவிதா, அஸ்வின்பாலாஜி இருவரும் நீரில் இறங்கினர்.
இருவரும் கூச்சலிட்டபடி நீரில் இறங்கியதை அவ்வழியே சென்றவர்கள் கண்டனர். அவர்கள் நீரில் குதித்து சிறுவர் - சிறுமியரை காப்பாற்றினர். திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீர்த்தேக்கத்தில் இறங்கி ரமேஷை தேடினர். இரவு நேரம் ஆனதால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. நேற்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தின் ஒரு கரையில் ரமேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
பென்னலுார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.