/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு மீனவர்கள் உண்ணாவிரதம் அரசு நடத்திய சமரச பேச்சு தோல்வி
/
பழவேற்காடு மீனவர்கள் உண்ணாவிரதம் அரசு நடத்திய சமரச பேச்சு தோல்வி
பழவேற்காடு மீனவர்கள் உண்ணாவிரதம் அரசு நடத்திய சமரச பேச்சு தோல்வி
பழவேற்காடு மீனவர்கள் உண்ணாவிரதம் அரசு நடத்திய சமரச பேச்சு தோல்வி
ADDED : நவ 27, 2025 03:44 AM
பொன்னேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், திருவள்ளூர் கலெக்டரை கண்டித்தும், மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில், அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
பழவேற்காடு மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 1ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக, போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இதுகுறித்து, மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவும்போது, மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய தடை விதிக்கப்படும் நிலையில், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; வனத்துறையின் கெடுபிடிகளால், எந்தவொரு கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை.
பழவேற்காடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்துதர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை தெரிவிக்க சென்ற மீனவர்களை, கலெக்டர் அவமதித்ததை கண்டித்தும், டிச., 1ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை, பொன்னேரி சப் - கலெக்டர் ரவிகுமார் தலைமையில், வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள், மீனவர்களிடம் பேச்சு நடத்தினர். முடிவு எட்டப்படாத நிலையில், தோல்வியில் முடிந்தது.
திட்டமிட்டபடி, டிச., 1ல், பழவேற்காடு பகுதியில் உள்ள 40 மீனவ கிராமங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, மீனவ கிராம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

