/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடர்மழையால் திருத்தணயில் குறைந்த பக்தர்கள்
/
தொடர்மழையால் திருத்தணயில் குறைந்த பக்தர்கள்
ADDED : டிச 02, 2024 02:51 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வர்.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் கடந்த இரு நாட்களாக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரு நாட்கள் விடுமுறை என்பதால், அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருவர் என எதிர்பார்த்த நிலையில். இரு நாட்களாக திருத்தணியில் தொடர்மழையால் குறைந்த அளவில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
பொதுவாக இலவச தரிசனத்தில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். ஆனால் நேற்று இலவச தரிசனத்தில், 20 நிமிடங்களில் மூலவரை தரிசனம் செய்தனர்.