/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் இழப்பீடு வழங்காத வனத்துறையினர்
/
கரும்பை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் இழப்பீடு வழங்காத வனத்துறையினர்
கரும்பை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் இழப்பீடு வழங்காத வனத்துறையினர்
கரும்பை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் இழப்பீடு வழங்காத வனத்துறையினர்
ADDED : மே 31, 2025 02:32 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட இழப்பீடு தொகை வழங்காமல், வனத்துறை இழுத்தடிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
ஏரிகள் மற்றும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும். நத்தம் புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியில், விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் வகையில், சிறு பாலம் அமைக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
போந்தவாக்கம் பகுதியில் சாலை அமைக்கப்பட்ட இடத்தில், நீர்வரத்து கால்வாயை மண்ணை கொண்டு மூடப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும். ஈக்காடுகண்டிகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து வனத்துறைக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தும், தற்போது வரை இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். விவசாயிகள் அளிக்கும் மனுவிற்கு சில துறை அலுவலர்கள் பதில் அளிப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதன்பின், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதலை, 500 மெட்ரிக் டன் வரை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2024 - 25ம் ஆண்டு சம்பா பருவத்தில், 15.33 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை, 9,118 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.