/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு
/
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு
ADDED : டிச 31, 2025 05:47 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் வந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அவருக்கு, திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அ.தி.மு.க.,வினர் வழிநெடுகிலும், பேனர், கட்சி கொடி அமைத்து வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் ஐ.சி.எம்.ஆர்., மைதானத்தில், திருவள்ளூர் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில், மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடன், மாவட்ட மாணவரணி செயலர் பாலாஜி, பூண்டி ஒன்றிய செயலர் மாதவன், துணை செயலர் விஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் மோகன்ராவ், பட்டரைபெரும்புதுார் கிளை செயலர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ஹரிபாபு பங்கேற்றனர்.
மேலும், மேற்கு மாவட்ட அம்மா பேரவை சீனிவாசன், கிளை செயலர் திருப்பாச்சூர் வசந்தகுமார், கடம்பத்துார் ஒன்றிய அவை தலைவர் சீனிவாசன், இளைஞர் இளம்பெண் பாசறை தலைவர் ரஜினி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

