/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலைகளில் திருட்டு நான்கு பேருக்கு 'மாவுக்கட்டு'
/
தொழிற்சாலைகளில் திருட்டு நான்கு பேருக்கு 'மாவுக்கட்டு'
தொழிற்சாலைகளில் திருட்டு நான்கு பேருக்கு 'மாவுக்கட்டு'
தொழிற்சாலைகளில் திருட்டு நான்கு பேருக்கு 'மாவுக்கட்டு'
ADDED : மார் 27, 2025 02:17 AM

திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், எறையாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து பேட்டரி, 'ஏசி' இரும்பு பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக, மணவாளநகர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த நிலையில், மணவாளநகர் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஆட்டோவில் பயணித்தவர்கள் போளிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 23, சுதாகர் என்ற அருள்குமார், 35, அஜீத்குமார், 25, மற்றும் உதயா என்ற பொச்சி, 25, என தெரிய வந்தது. மேலும், மேற்கண்ட பகுதி தொழிற்சாலைகளில் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
விசாரணையின்போது, சூர்யா, அஜீத் ஆகியோர் தப்பியோட முயன்று தடுமாறி விழுந்ததில், சூர்யாவுக்கு இடது காலிலும், அஜீத்திற்கு வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நேற்று காலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி. சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.