/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிறந்த நாளில் வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர்கள்
/
பிறந்த நாளில் வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர்கள்
ADDED : ஜூலை 14, 2025 11:41 PM

வியாசர்பாடி, பிறந்த நாள் கொண்டாடிய வாலிபரை, நண்பர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம், வியாசர்பாடியில் நடந்துள்ளது.
வியாசர்பாடி, புதுநகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் சங்கர், 19; கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர், தன் பிறந்தநாளை, எருக்கஞ்சேரி சாலையில் நேற்று, தன் நண்பர்கள் நித்தின், லிங்கேஷ், சங்கர், லோகேஷ்வரன், பாஸ்கர், வசந்த், பில்கேட்ஸ் உள்ளிட்ட 11 பேருடன், 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
சங்கரை மது வாங்கித் தரச் சொல்லி, நண்பர்கள் குடித்துள்ளனர். சங்கரும் போதையேற்றி உள்ளார். அப்போது, சங்கருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே, பழைய பிரச்னைகள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சங்கரை, அவரது நண்பர்களே, மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஓட ஓட விரட்டி, வெட்டிவிட்டு தப்பினர். சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்.
கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்த சங்கரின் நண்பர்கள் லிங்கேஷ், நித்தின், ஸ்டீபன் ராஜ், கந்தா ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.