/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஞ்சாட்சர மலையில் பவுர்ணமி கிரிவலம்
/
பஞ்சாட்சர மலையில் பவுர்ணமி கிரிவலம்
ADDED : ஆக 08, 2025 10:28 PM
ஆர்.கே.பேட்டை:பஞ்சாட்சர மலை கிரிவல பாதையில், ஆடி பவுர்ணமியை ஒட்டி நேற்று, ஏராளமான சிவனடியார்கள் கிரிவலம் வந்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில், பஞ்சாட்சர மலை அமைந்துள்ளது.
இந்த மலை உச்சியில், 700 ஆண்டுகள் பழமையான மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.
பிரத்யேக கோவிலின்றி, மலை உச்சியில் திறந்தவெளியில் உள்ள மூலவர் சுவாமிக்கு, பக்தர்களே அபிஷேகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆடி மாத பவுர்ணமியான நேற்று மாலை, மரகதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, செல்லாத்தம்மன் கோவில் வளாகத்தில் இருந்து சிவனடியார்கள் ஏராளமானோர், பஞ்சாட்சர மலை பாதையில் கிரிவலம் வந்தனர்.
முன்னதாக, வரலட்சுமி விரதத்தை ஒட்டி செல்லாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவையும், குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.