sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கங்கையம்மன் ஜாத்திரை விழா

/

கங்கையம்மன் ஜாத்திரை விழா

கங்கையம்மன் ஜாத்திரை விழா

கங்கையம்மன் ஜாத்திரை விழா


UPDATED : மே 27, 2025 08:33 PM

ADDED : மே 27, 2025 08:14 PM

Google News

UPDATED : மே 27, 2025 08:33 PM ADDED : மே 27, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கசத்திரம் காலனியில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு சக்தி அம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மாலையில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூங்கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு, 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாம்பாக்கசத்திரம் காலனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாலங்காடு


திருவாலங்காடு சாலையில் உள்ள கங்கையம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

மதியம் 1:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, பன்றி காவு கொடுக்கப்பட்டு பின் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

மாலை, 6:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்துடன், பூங்கரகம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us