/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை வண்டி 'மக்கர்' துாய்மை பணியாளர் அவதி
/
குப்பை வண்டி 'மக்கர்' துாய்மை பணியாளர் அவதி
ADDED : செப் 10, 2025 03:25 AM

கடம்பத்துார்:புதுமாவிலங்கை ஊராட்சியில் பராமரிப்பில்லாத பேட்டரி குப்பை வண்டி அடிக்கடி 'மக்கர்' ஆவதால், துாய்மை பணியாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்களிலும் குப்பை அள்ளும் பணிக்காக ஊரக வளர்ச்சித் துறை மூலம் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி குப்பை வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குப்பை வாகனங்கள், பல ஊராட்சிகளில் பராமரிப்பில்லாததால் பழுதடைந்து வீணாகி வருகிறது.
மேலும், ஊராட்சிகளில் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளும்போது, வாகனம் பழுதாகி நின்று விடுகிறது. இதனால், துாய்மை பணியாளர்கள் வாகனத்தை கைகளால் தள்ளிக் கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது. இதன் காரணமாக, குப்பை அள்ளும் பணி பாதிக்கப்படுவதால், ஊராட்சிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குப்பை அள்ளும் வாகனத்தை பராமரிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென, துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.