/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காஸ் கசிந்து தீ விபத்து டீக்கடை எரிந்து சாம்பல்
/
காஸ் கசிந்து தீ விபத்து டீக்கடை எரிந்து சாம்பல்
ADDED : ஜன 05, 2025 10:38 PM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, பெரியகாவணம் பகுதி சாலையோரம், ஓலை குடிசையில் டீக்கடை நடத்தி வருபவர், ரவி, 40; இவர், நேற்று அதிகாலை வழக்கம்போல, டீக்கடையை திறந்து, பால் காய்ச்சுவதற்காக, காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் வால்வு பகுதியில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்தது.
ரவி, அலறியடித்து கொண்டு வெளியில் ஓடி வந்தபோது, காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. தீ வேகமாக பரவி, குடிசை எரிய துவங்கியது. பொன்னேரி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை மற்றும் டீக்கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின.
இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.