/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
/
2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜூலை 02, 2025 09:16 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம், கோமாரி நோய் தடுப்பூசி பணி ஏழாவது சுற்று துவக்க நிகழ்ச்சியில், தண்ணீர்குளம் கிராமத்தில் 647 பசு, 167 எருமைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,79,550 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பணி, நேற்று துவங்கி வரும் 30ம் தேதி வரை கிராமங்கள் தோறும் நடைபெறும்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு, பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.