/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீரில் தத்தளிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி
/
தண்ணீரில் தத்தளிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி
ADDED : டிச 14, 2024 01:49 AM

திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி.
இங்கு இப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர், 1 - 8ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவ - மாணவியர் தண்ணீர் தேங்காத வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர்.
இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த பள்ளி வகுப்பறை உட்பட பல்வேறு வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டவும் மழைநீர் தேங்காத வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.