/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2025 07:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என, அரசு ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை, ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு, குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

