/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைதீர் கூட்டம் 505 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டம் 505 மனுக்கள் ஏற்பு
ADDED : மே 26, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் :திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள், நிலம் சம்பந்தமாக -- 120, சமூக பாதுகாப்பு திட்டம் -- 111, வேலைவாய்ப்பு கோரி -- 62, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி -- 136 மற்றும் இதர துறை -- 76 என, மொத்தம் 505 மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

